கண்ணதாசனை அடையாளம் காட்டியது கோவை!!!!


கண்ணதாசனை அடையாளம் காட்டியது கோவை தான்


 
                    வாழ்க்கை தத்துவம் நிறைந்த பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் இன்னும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன். ஆனால், இவரை முதன் முதலில் அடையாளம் காட்டியது கோவை சினிமா உலகம் தான் என்பது பலர் அறிந்திராத செய்தி. இயல்பாகவே கதை எழுதுவதில் ஆர்வமுள்ள கண்ணதாசன், சினிமாவுக்கு கதை வசனம் எழுதும் நோக்கத்துடன் தான் கோவை வந்தார்.

                  அப்போது சென்னையை காட்டிலும் கோவையில் தான் சினிமா தயாரிப்பு அதிகம் நடந்தது. சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு 1949ல் வந்த கண்ணதாசன், தயாரிப்பாளர் ஜூபிடர் சோமுவை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார். அப்போது மர்மயோகி படம் தயாராகி கொண்டிருந்த நேரம். பாட்டு எழுத தெரியுமா என ஜூபீடர் சோமு கேட்க, தைரியமாக எழுத தெரியும் என கூறியுள்ளார். ஒரு பாட்டு எழுதி தரும்படி கூறியுள்ளார்.

                           அப்போது முதல் பாடலாக கலங்காதிரு மனமே, கலங்காதிரு....உன் கனவெல்லாம் நனவாகும் என்ற பாடலை எழுதி கொடுத்துள்ளார். அவரது முதல் படத்திலேயே இந்த பாட்டு ஹிட் ஆகி அதற்கு நூறு ரூபாய் சம்பளமும் பெற்றார்.அதன் பின்னர் தான் அவர் கவிஞராக அடையாளம் காணப்பட்டார். கடைசியில் அவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களையும், வனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் என ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். கண்ணதாசனை கவிஞராக அடையாளம் காட்டியது கோவை தான் என்பது பலரும் அறிந்திராத செய்தி.
 
 
*News obtained from: Dinakaran
Tags

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !